உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

திமுக தயவில் தான் தற்போது தமிழக்தில் ஆட்சி நடக்கிறது – மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக தயவில் தான் தற்போது தமிழக்தில் ஆட்சி நடக்கிறது – மு.க.ஸ்டாலின் பேச்சு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னையில் இருக்கும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவை பொறுத்த வரை எப்போதுமே வெற்றி, தோல்வி மாறி மாறியே வரும். தோல்வியை கண்டு ஒருபோதும் துவண்டு விட மாட்டோம். பொதுவாக, சுயலாபத்துக்காக ஆளுங்கட்சிக்கு மாற்றுக்கட்சியினர் செல்வார்கள். வேறு கட்சிக்கு செல்வதால் கிடைக்கும் லாபம் மற்றும் அதிகாரத்தை மனதில் வைத்துத்தான் செல்வார்கள். அதிலும் ஆளும் கட்சியை நோக்கித்தான் அதிகம் செல்வார்கள்.

ஆனால் இன்று திமுகவை நோக்கி வருகிறார்கள் என்றால், பதவிக்காகவோ, சொகுசான வாழ்க்கைக்காகவோ யாரும் வரவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் கூட தற்போது திமுகவில் மாற்றுக்கட்சியினர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன் என்றார்.

ஆட்சி முக்கியம் இல்லை, ஜனநாயகமே முக்கியம் என்று கருதியே அவசர நிலையை கலைஞர் கருணாநிதி எதிர்த்தார் என்று மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். எனவே திமுகவிற்கு எப்போதும் ஆட்சி முக்கியமில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், குடியரசுத்தலைவர் ஆட்சி தமிழகத்தில் வந்துவிட கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவளிக்க கூட்டணி கட்சிகளை அனுப்பி வைத்தோம். எனவே திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஏனென்றால், திமுக வெற்றி பெற வேண்டும் என்று விரும்பிய கட்சிகளின் ஆதரவோடு தான் தற்போது தவெக ஆட்சி நடைபெறுகிறது. பாஜக வந்துவிட கூடாது என்பதற்காகவே கூட்டணி கட்சியினரை வழியனுப்பி வைத்தேன் என்று ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.