அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை இல்லை – கே.பி.முனுசாமி சாடல்

அதிமுக முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி, எம்.எஸ்.எம். ஆனந்த் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் 7 பேர் இன்று அமைச்சர்கள் என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழக்கம் போல் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். பேப்பரில் மட்டும் தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒட்டுமொத்த அதிமுக மற்றும் தொண்டர்கள் தவெகவில் தான் இருக்கிறார்கள். நடைபெற்று முடிந்த […]
ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் உத்தரவு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

தனியார் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்க வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும். சென்னை நகருக்குள் நுழையக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி மாநில போக்குவரத்து துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் […]
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் இன்று கோவை மற்றும் நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களின் மலைப்பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 3.1 கி.மீ. உயரத்தில் வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, […]
முதல்வருக்கு யாரையும் பார்த்து பயம் கிடையாது – அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் மதுரை மாநகராட்சி மற்றும் மதுரை மாவட்ட அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் மற்றும் வருவாய்துறை, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டாஸ்மாக் மது விற்பனையை சீராக்குவது, பார் […]
தவெகவில் இணைந்த 5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூ.கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, திமுக, அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிலும் […]
தென்மேற்கு பருவமழை தீவிரம் – கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்

கேரளாவில் வழக்கத்தை விட 3 நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை கடந்த 4ம் தேதி தொடங்கி பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வட கேரளா முழுவதும் பெய்து வரும் தொடர்ச்சியான கனமழையால் பரவலாக சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று பாசில் மிஷனரி பள்ளி ஒன்றின் பிரம்மாண்டமான தடுப்புச் சுவர் ஒன்று, அருகிலிருந்த சாலையின் மீது சரிந்து விழுந்தது. கட்டமைப்பு ரீதியாக பலவீனமாக இருந்ததை தொடர்ந்து சமீபத்தில் தான் இப்பள்ளியின் கல் […]
திமுக தயவில் தான் தற்போது தமிழக்தில் ஆட்சி நடக்கிறது – மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னையில் இருக்கும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவை பொறுத்த வரை எப்போதுமே வெற்றி, தோல்வி மாறி மாறியே வரும். தோல்வியை கண்டு ஒருபோதும் துவண்டு விட மாட்டோம். பொதுவாக, சுயலாபத்துக்காக ஆளுங்கட்சிக்கு மாற்றுக்கட்சியினர் செல்வார்கள். வேறு கட்சிக்கு செல்வதால் கிடைக்கும் லாபம் மற்றும் அதிகாரத்தை மனதில் […]
2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் – 18 வயது நிறைவடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது 18 வயது நிறைவடைந்தும் இன்னும் முதிர்வுத் தொகை கிடைக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, சென்னை மாவட்டம், மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது […]
அசாம் அமைச்சரவை விரிவாக்கம் – 12 அமைச்சர்கள் பதவியேற்பு

அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 12 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். கவுஹாத்தியில் உள்ள ஜோதி -விஷ்ணு சர்வதேச கலா மந்தீர் வளாகத்தில் நடந்த விழாவில், ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா எம்எல்ஏக்களுக்கு அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்களாக பதவியேற்ற 11 பேர் பாஜ எம்எல்ஏக்களாவர். மேலும், ஒருவர் ஏஜிபியை சேர்ந்தவர். இந்த விரிவாக்கத்தின் மூலமாக அசாம் அமைச்சரவையின் மொத்த […]
58 அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி – இரண்டாக உடைகிறதா திரிணாமுல் காங். கட்சி?

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் 58 எம்எல்ஏக்கள் பிரிந்து ஒரு அணியாக செயல்படத் தொடங்கி இருப்பது முன்னாள் முதல்வர் மம்தாவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அவர் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தார். அம்மாநிலத்தில் முதல்முறையாக பாஜ […]