உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

முதல்வருக்கு யாரையும் பார்த்து பயம் கிடையாது – அமைச்சர் நிர்மல்குமார்

முதல்வருக்கு யாரையும் பார்த்து பயம் கிடையாது – அமைச்சர் நிர்மல்குமார்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் மதுரை மாநகராட்சி மற்றும் மதுரை மாவட்ட அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் மற்றும் வருவாய்துறை, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, டாஸ்மாக் மது விற்பனையை சீராக்குவது, பார் நேரம் குறித்தும், மனமகிழ்மன்றம் கண்காணிப்பு, குவாரிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் அனைத்து சட்ட விரோத குவாரிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. கழிவுநீர் கால்வாய்க்கான தற்காலிக தீர்வு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மாநகராட்சி வரி, முறைகேடு, ஊழல் குறித்து கணக்கீடு எடுத்து வருகின்றோம். நிலுவையில் உள்ள அனைத்து ஊழல் வழக்குகளும் விரைவில் முடிக்கப்படும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த மதவாத சக்தியும் தலையிட விடமாட்டோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள், இரண்டு வருடத்திற்கு முன்பு இருந்த சூழலே தொடரும்.

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு யாரையும் பார்த்து பயம் இல்லை. எவ்வளவோ மிரட்டிய திமுகவிற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பயப்படவில்லை. செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் எனும் பென்ச் மார்க் கிடையாது.

முதலமைச்சராக இருக்கக்கூடியவர்கள் செய்தியாளர்களை சந்திப்பது கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக இருந்த ஒரு சிலர் தங்களுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக செய்தியாளர்களை சந்தித்து வந்தனர். ஊடகங்கள் எப்போது தேவையோ அப்போது தான் சந்திக்க வேண்டும்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் மக்களை சந்தித்து வருகிறார், மக்களை சந்தித்து பேச கடமைப்பட்டுள்ளோம். முதலமைச்சர் ஊடகங்களை சந்திக்க வேண்டும் எனும் பெஞ்ச் மார்க் நீங்களே உருவாக்கிக் கொண்டது தான்.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பிலும் தமிழக அரசின் சார்பிலும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறோம். ஊடகங்களுக்கு கூற வேண்டியது முதலமைச்சர் செய்தி அறிக்கையாக அளித்து வருவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.