அதிமுக கேவலமான தோல்வியை சந்திக்கும் – திண்டுக்கல் லியோனி

கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அனைத்து மதத்தினருக்கும் நன்மை செய்பவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்வதாகவும், மத வேறுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டில் திமுக அரசு ஆட்சி நடத்தி வருவதாகவும் புகழாரம் சூட்டினார். கல்வியும், அறிவும் தான் பெண்களுக்கு நிரந்தர அழகு எனக் கூறிய அவர், திராவிட மாடல் அரசின் மிகப் பெரிய சாதனைகளினால், இந்தாண்டு மட்டும் 5 […]
மக்களவை மார்ச் 9ம் தேதி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் ஜன.28ம் தேதி தொடங்கி பிப்.13ம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார். மேலும், இதன் 2வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 9ம் தேதி நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய முதல் கட்ட கூட்டத்தொடரில், பிப்.1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக, நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு […]
தேர்தல் தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, இம்மாநிலங்களின் அரசியல் களத்தில் தேர்தல் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, திமுக-அதிமுக தலைமையிலான கூட்டணிகள் தங்களது தோழமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தும் குழு அமைத்தல் உள்ளிட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் முதல் நாளாக தேர்தல் பணி தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் […]
காரைக்காலில் அமைச்சர் அமித்ஷா பொதுக்கூட்டம்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டுமே தமிழகம் வருகை தருவது டெல்லி மேலிட பாஜக தலைவர்களின் வழக்கமாகும். அதன்படியே, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரின் தமிழக வருகை அமைந்துள்ளது.அவ்வாறே, பிரதமர் மோடி கடந்த மாதம் மதுராந்தகம் என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த நிலையில், காரைக்காலில் நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித் […]
விஜயின் சேலம் பரப்புரைக் கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் நடந்தது. நிர்வாகிகள் கூட்டத்தையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் தவெகவைச் சேர்ந்த 4,998 நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள போலீசார் அனுமதி அளித்திருந்தனர். இதனையடுத்து நிர்வாகிகளை மட்டும் மைதானத்துக்குள் அனுமதிக்கும் வகையில், க்யூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. அங்கிருந்த போலீசார் அந்த அட்டைகளை […]
மகளிர் உரிமைத் தொகை: வங்கி கணக்கில் ரூ. 5000 வரவு…

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகையின் கீழ், பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டு மகளிருக்கு ஸ்டாலின் அளித்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் அடிமையாக இருக்கக் கூடிய கூட்டமும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி, உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு. பிப்., மார்ச், ஏப்., […]