வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் நிலையில் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பிப். 21 மற்றும் 22 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
சிறப்பு தொழுகையுடன் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு தொடக்கம்

இஸ்லாமிய நாள்காட்டியின் 9வது மாதமான ரமலான் மாதத்தில் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இந்தாண்டுக்கான நோன்பு பிப்.19 தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையொட்டி, இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று வழக்கம் போன்று, மசூதிகளில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு அரசு 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று (பிப்.18) மாலை […]
திமுகவுடன் கூட்டணி ஏன் – பிரேமலதா விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக தேமுதிக, திமுக தலைமையிலானக் கூட்டணியில் இன்று இணைந்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் சென்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், செய்தியாளர்கள் நீண்ட நாட்களாகக் கேட்டு வந்த கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. தேமுதிக தொண்டர்கள் மற்றும் […]
திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக

திமுக கூட்டணியில் தேமுதிக இன்று இணைந்துள்ளது. இதற்காக சென்னை அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயத்திற்கு சென்ற தேமுதிக பொதுச் செயலாளர் பிரமேலதா முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியில் இணைந்துள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேமுதிக கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நல கூட்டணி, 2019ல் பாஜக கூட்டணி, 2021ல் அமமுகவுடன் கூட்டணி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. இந்த 4 தேர்தல்களிலும் தேமுதிக தொடர் தோல்வியை […]
என்டிஏ கூட்டணிக்கு முதல்வர் ரங்கசாமி பை…பை.. விஜயுடன் கூட்டணி

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் 2வது வாரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இம்மாநிலங்களில் அரசியல் களவரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைமையிலான கூட்டணி வரும் 22ம் தேதி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கும் என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே நேரம், தேமுதிகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் […]
தக்காளி விலை கடும் வீழ்ச்சி – கிலோ ரூ.10க்கு விற்பனை

பொதுவாகவே, தக்காளி மற்றும் வெங்காயம் விலை மழைக் காலங்களில் ஏற்படும் சேதத்தினால் தறுமாறாக ஏற்றம் காண்பது வழக்கமாகும். அதே போல், கோடைக்காலத்தில் இவற்றின் விலை வீழ்வதும் வாடிக்கையான ஒன்று. விலையேற்றதின் போது அதனை ஈடுசெய்ய மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம், தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு விலையேற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்படும். வழக்கமாக, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், கடவூர், புத்தூர், வடமதுரை, தென்னம்பட்டி, மலையூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. […]