ஈரான் தாக்குதலுக்கு முன் மோடி – நெதன்யாகு ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன?

பிரதமர் மோடி கடந்த பிப்.26ம் தேதி இஸ்ரேல் நாட்டிற்கு 2 நாள் அரசுமுறை பயணமாக சென்றிருந்தார். பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்ப வந்தவரை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் பென் குரியன் விமான நிலையத்தில் நேரில் வழியனுப்பினர். அப்போது பிரதமர் மோடி-நெதன்யாகு ஏறக்குறைய 15 நொடிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களது நட்பை வெளிப்படுத்தினர். இந்த பிரிவு உபசார கட்டிப்பிடிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. இந்த சந்திப்பு […]
போர் பதற்றம் – இந்திய பங்குச் சந்தை 1,100 புள்ளிகள் வீழ்ச்சி

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் உச்ச தலைவர் காமெனி, அவரது குடும்பத்தினர் மற்றும் அந்நாட்டின் முக்கிய ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் ராணுவ நிலைகள் மற்றும் அதன் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகளின் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு நிலைமை மோசமாகி வருகிறது. இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மத்திய கிழக்கு நாடுகளில் […]
தொகுதி பங்கீட்டில் குழப்பம்: அமித் ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் இபிஎஸ்

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, இம்மாநிலங்களின் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணியும் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு காங்கிரஸ், மதிமுக, ஐயூஎம்எல், மமக, மஜக, தவாக, கொ.ம.தே.க, எஸ்.டி.பி.ஐ., கொ.இ.பே. உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இன்று விசிக மற்றும் மநீம கட்சிகளுடன் […]
இனி 3 மாதங்களுக்கு வெப்ப அலை – வானிலை மையம் எச்சரிக்கை

வழக்கத்திற்கு மாறாக, இந்தாண்டு தமிழகத்தில் கடும் பனியும் குளிரும் வாட்டிக் கொண்டிருந்தது. பனிக்காலமும் கூட சிறிது நாள் நீடித்திருந்தது. அப்போதே, இதே போல், கோடைக்காலத்தில் வெயிலும் வாட்டி வதைக்கும் என்று மக்கள் அஞ்சி நடுங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் வெயில் வாட்டி வதைக்கும் எனவும் குறிப்பாக வட மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. மார்ச் முதல் மே மாதம் வரையிலான 3 மாதங்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. […]
தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2025-26ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் 12ம் வகுப்புக்கு மார்ச் 2ம் முதல் 26ம் தேதி வரையிலும், 10ம் வகுப்புக்கு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்.6 வரையிலும் நடைபெறுகின்றன. இன்று தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை, 3,412 தேர்வு மையங்களில், பள்ளி மாணவர்கள் 7,99,692 பேரும், தனித்தேர்வர்கள் 27,783 என மொத்தம் 8,27,475 தேர்வர்கள் எழுதுகின்றனர். மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின் அடிப்படையில் 11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. […]
இனி முடிவு உங்கள் கையில் இல்லை – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரான் ஏவுகணை பலத்தை அதிகளவில் பெருக்கி வருவதாகவும், அணு ஆயுதம் தயாரிக்க யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் செல்வாக்கை ஈரான் சிதைத்து வருவதாலும், ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு ஈரான் வழங்கும் ஆயுதங்கள், நிதி உதவி, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்ததாலும் கொமேனியின் அதிகாரத்தை முடக்க அமெரிக்கா-இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்த திட்டமிட்டன. கடந்தாண்டு ஜூன் […]