உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

திமுக பிரச்சார பாடல்: 1 கோடி பார்வைகளை கடந்து சாதனை

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி களமாடத் துவங்கி இருப்பதால் இங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட ‘ஸ்டாலின் தான் வர்றாரு’ பாடல் மிகவும் பிரபலமடைந்து பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தது. அதே போன்றதொருப் பாடலை வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு திமுக வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு […]

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இங்கு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக அரசின் 2026 -27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். “எல்லார்க்கும் எல்லாம்” என்ற கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், கல்வி, மகளிர் நலம், இளைஞர் மேம்பாடு, உள்கட்டமைப்பு துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு […]

அசாமில் தலைமை தேர்தல் ஆணைய குழு 2வது நாளாக இன்று ஆய்வு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளது. இம்மாநிலங்களின் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 11ம் தேதி சென்னை வந்த துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான […]

தடுமாற்றத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.960 குறைவு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக, கடந்த ஜன.29ம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து கிராம் ரூ.16,800க்கு விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை, அதன் பிறகு ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த ஜன.30 மற்றும் 31ம் தேதிகளில் சவரனுக்கு ரூ.7,600 வீதம் 2 நாட்களில் 22 காரட் ஆபரணத்தங்கம் ரூ.15,200 என்ற அளவில் விலை வீழ்ச்சியை சந்தித்தது. அதன் […]

தை முடிந்தும் முடிவெடுக்க முடியாத ஓபிஎஸ்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அம்மாநிலங்களின் அரசியல் நிலவரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி இடையே இருமுனைப் போட்டி நிலவும் எனக் கூறப்பட்ட நிலையில், நடிகர் விஜயின் தவெகவின் அரசியல் வருகையால் மும்முனை போட்டியாகக் கூடும் என்று கூறப்படுகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், […]

தமி¬ழக, புதுவை மீனவர்களை மீட்க விஜய் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் எல்லை கடந்து மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்யப்படும் அராஜக போக்கும் தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை நேற்று கைது செய்துள்ளது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 […]

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டமான சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தத் தேர்வை 43.67 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதில், 10ம் வகுப்பு தேர்வை 25 லட்சத்து 8319 பேர், 12ம் வகுப்பு தேர்வை 18 லட்சத்து 59,551 பேர் என நாடு முழுவதும் மொத்தம் 43 லட்சத்து 67 ஆயிரத்து 870 மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் […]

© NewsTimeTN. All Rights Reserved.