நாளை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கலாம் – தலைமை காஜி அறிவிப்பு

இஸ்லாமியர்கள் அவர்களது மத அடிப்படையிலான நாள்காட்டியின் 9வது மாதமான ரமலான் மாதம் நோன்பு கடைபிடிப்பது வழக்கமாகும். இந்தாண்டு நோன்பு பிப்.18ம் தேதி கடைபிடிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், பள்ளிவாசல் நிர்வாகங்களின் கோரிக்கைக்கு இணங்கி, கடந்த ஆண்டுகளைப் போல தமிழக அரசு நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்கியுள்ளது. இந்த வருட ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க மொத்த அடிப்படையின் கீழ் 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், […]
தலைமை தேர்தல் ஆணையர் பிப். 26, 27 தேதிகளில் தமிழகம் வருகை

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் துணைத் தேர்தல் ஆணையர்கள் தலைமையிலானக் குழு தேர்தல் தயாரிப்பு, தேர்தல் முன்னேற்பாடு குறித்து இம்மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் எனவும், சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 2வது வாரத்தில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, கடந்த 11ம் தேதி […]
பள்ளிவாசல் நோன்பு கஞ்சிக்கு 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி: முதல்வர் உத்தரவு

ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமிய நாள்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்த நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்.இந்தாண்டு ரம்ஜான் மாத நோன்பு பிப்.18 முதல் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், இதனை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க தமிழக முதல்வர் […]
சாம்பல் புதன் அனுசரிப்புடன் தொடங்கியது கிறிஸ்தவர்களின் தவக்காலம்

கிறித்தவர்களின் முக்கியமான புனித நாட்களில் ஒன்றான திருநீற்றுப் புதன் அல்லது சாம்பல் புதன் முன்பு விபூதிப் புதன் என்று அழைக்கப்பட்டது. இந்நாளில் கிறித்தவர்கள் நெற்றியில் புனிதப்படுத்தப்பட்ட சாம்பலால் சிலுவை அடையாளமிடப்படுகிறது. ஏனென்றால், சாம்பல் தவத்திற்கும், தன்னொறுத்தலுக்கும், மன மாற்றத்திற்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது. சாம்பல் புதன் மனித இறப்பு மற்றும் கடவுளின் அருளைப் பெற வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது. மேலும் இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. நாற்பது நாள் நீடிக்கின்ற தவக்காலத்தின் முதல் நாள் இதுவே ஆகும். திருநீற்றுப் […]
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை சீட்களுக்கு தேர்தல்

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோவன், செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகாவின் ஜி.கே.வாசன் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியோடு நிறைவுபெறுகிறது. இதனையொட்டி, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப். 26ம் தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்வதற்கு கடைசி நாள் மார்ச் 5ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட காலியாக உள்ள […]
மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணமல்ல – சிபிஐ அறிக்கை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள மைக்கேல்பட்டி பள்ளியில் படித்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி லாவண்யா கடந்த 2022ம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் சித்தி கொடுமை, பள்ளியில் கொடுக்கப்பட்ட கூடுதல் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் மாணவி லாவண்யாவை கட்டாய மதமாற்றத்தில் ஈடுப்படுத்தியதால், இந்த மரணம் நிகழ்ந்ததாக அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் விஎச்பி நிர்வாகிகள் குற்றம்சாட்டினார்கள். இதனை மாவட்ட […]
இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்கலாம் – உத்தவ் தாக்கரே சிவசேனா

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூடுதல் தொகுதி, ஆட்சியில் அதிகாரம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதால் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்லது மே.வங்க முதல்வர் மம்தா […]