உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

நிதிஷ்குமார் திடீர் பதவி விலகல் – பீகார் முதல்வர் பதவியை கைப்பற்றும் பாஜ?

பீகாரில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதில், பாஜ 89, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 85, சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி ராம்விலாஸ் (எல்ஜேபிஆர்வி) 19, ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா செக்குலர் (எச்ஏஎம்எஸ்) 5, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேஜ கூட்டணி மொத்தமாக 202 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, பீகாரில் மீண்டும் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு

இந்தாண்டு தொடக்கத்தில் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வந்த தங்கம் விலை கடந்த மாதத்தில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இம்மாதம் தொடக்கம் முதல் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,240 குறைந்திருப்பது நகை வாங்கும் தேவையில் இருப்போரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த பிப்.28ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,200ம் மார்ச் 1ம் தேதி பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை நாளாக இருந்தும், போர் […]

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் – வானிலை மையம் தகவல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 7 முதல் 9ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலைமாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மார்ச் 10ம் […]

அதிமுகவுக்கு வெற்றி பெறும் வலிமை இல்லை – கிரிஷ் சோடங்கர்

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையேயான கூட்டணி பிளவுபடுமா, பிரியுமா, முறியுமா என எதிர்க்கட்சிகள் ஆதங்கத்துடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்த்திருந்த நிலையில், முட்டுக்கொடுத்து அதனை சரிக்கட்டியுள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். கடந்த முறையை விட கூடுதல் தொகுதி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, உள்ளாட்சிகளில் பதவி என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தியது திமுக தலைமைக்கு தலைவலியானது. ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்தில் ஒத்துவராது என்று முதல்வர் நேரடியாக மறுத்த பின்னும், காங்கிரஸ் முரண்டு பிடித்தது திமுக தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு […]

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி – தாக்கரேவிடம் கையேந்தும் காங்கிரஸ்

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை பதவிகளுக்கு மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப். 26ஆம் தொடங்கியது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 5) நிறைவடைகிறது. வரும் 16ம் தேதி நடத்தப்பட்டு, அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், தற்போது இருக்கும் எம்எல்ஏ.க்களின் அடிப்படையில் 4 […]

முடிவு பெற்ற தொகுதிப் பங்கீடு: திமுக கூட்டணியில் காங்.,க்கு 28+1 ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக – காங்கிரஸுக்கு இடையே 60 நாட்களுக்கும் மேலாக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இதனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி அமைத்து போட்டியிட்டு வரும் கூட்டணியில் பிளவு ஏற்படுமா? திமுகவை விட்டு காங்கிரஸ் பிரிகிறதா என்ற பல்வேறு கோணத்தில் அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் கருதினர். இதற்கு காரணம், இந்த முறை காங்கிரஸ் 39 தொகுதிகளும் 2 மாநிலங்களவை சீட்டுகள், ஆட்சியில் அதிகாரம் என்ற […]

மாநிலங்களவை தேர்தல்: திமுக, காங்., அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மே.வங்க மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர் நோக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை பதவிகளுக்கு மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப். 26ஆம் தொடங்கியது. இன்று (மார்ச் 5) வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 16ம் தேதி நடைபெற்று, அன்று மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் […]

© NewsTimeTN. All Rights Reserved.