போர் எதிரொலி – இந்திய பங்குச் சந்தை 1470 புள்ளிகள் வீழ்ச்சி

மத்திய கிழக்கு நாடுகள் இடையேயான போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற முக்கிய காரணங்களால் இந்த வாரத் தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் சரிவுடன் காணப்பட்டன. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்தது. வாரத்தின் தொடக்க நாளான திங்களன்று (மார்ச் 9) சென்செக்ஸ் சுமார் 2,400 புள்ளிகள் வரை சரிந்ததால், முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. அதே போன்று, நிஃப்டி குறியீடு 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 23,800க்கு […]
திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், வரும் தேர்தலில் 200 இடங்களில் வென்று 2வது முறையாக ஆட்சியில் அமரும் முனைப்புடன் களத்தில் இருக்கும் திமுக தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, விசிக, மநீம, தவாக, இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல், மமக உள்பட 20 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தற்போது வரை, காங்கிரஸுக்கு 28, மதிமுகவுக்கு […]
ஐபிஎல் 2026 – பிசிசிஐயின் புதிய 10 வழிகாட்டுதல் விதிமுறைகள்

ஐபிஎல் 2026 முதல் 20 நாட்களுக்கான அட்டவணையை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா நேற்று முன்தினம் வெளியிட்டார். தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, வரும் 28ம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியும், ஐதராபாத் அணியும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன. இந்த நிலையில், புதிய ஐபிஎல் 2026க்கான புதிய பயிற்சி வழிகாட்டுதல்களை பிசிசிஐ […]
அதிமுகவில் இணைந்தார் நாதக முன்னாள் நிர்வாகி காளியம்மாள்

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் சீமானுக்கு அடுத்துள்ள முக்கியமானவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்ததாகக் கூறப்பட்டது. இது நாளடைவில் வெளிப்படையாக தெரியத் தொடங்கிய நிலையில் கடந்தாண்டு பிப்ரவரியில் நாதகவில் இருந்து காளியம்மாள் விலகினார். அதன் பின்னர், அவர் பல்வேறு கட்சிகளில் இணையப்போவதாக அவ்வப்போது தகவல்கள் […]
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் சின்னத்துடன் அறிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து, டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியையும், திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் கட்சியையும் தொடங்கினர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை சென்ற சசிகலா வெளியே வந்த பின்பு,அவருக்கும் தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதே நேரம், கடந்த 2022ம் […]
திமுக மாணவரணி செயலாளராக முதன்முறையாக பெண் நிர்வாகி நியமனம்

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி, இம்மாநிலங்களில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, மாபெரும் திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணி அமைத்து கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. இதில் காங்கிரஸ், ஐயூஎம்எல், மமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், அதிமுக தலைமையிலான கூட்டணியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வந்த போது நடந்த […]
திமுக மிரட்டல் விடுத்ததால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை – ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிடவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களை தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு கண்டனமும், தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தவெக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு […]