உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

எச்டிஎப்சி, பிஎன்பி, பந்தன் வங்கிகளில் ஏப்.1 முதல் புதிய ஏடிஎம் விதிகள்

எச்டிஎப்சி, பிஎன்பி மற்றும் பந்தன் வங்கிகள் வரும் ஏப்.1 முதல் புதிய கட்டணங்கள், பணம் எடுப்பதற்கான வரம்புகளை அமல்படுத்த உள்ளன. ஆங்கில நாளிதழில் ஒன்றில் வெளியான கட்டுரையில், நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி, அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது, எச்டிஎப்சி வாடிக்கையாளர்களில் பலர் டெபிட் கார்டு இல்லாமல் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றனர். ஆனால், வரும் ஏப்.1 முதல், இத்தகைய யுபிஐ அடிப்படையிலான […]

நடிகர் சூர்யாவை பின்பற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களிர் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவைக் கடந்து அகரம் அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்து வருகிறார். நடிகர் சூர்யாவால் 2006ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அகரம் அறக்கட்டளை, தமிழ்நாட்டில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை, வழிகாட்டுதல் மற்றும் முழுமையான கற்றல் சூழலை வழங்கி வருகிறது. இதன் மூலம், இதுவரை 6,700க்கும் மேற்பட்ட மாணவர்களை முதல் தலைமுறை பட்டதாரிகளாக உருவாக்கியுள்ளது. இது தவிர, விதைத் திட்டம், வழிகாட்டுதல் மற்றும் விடுதி வசதிகள் […]

அதிவேகமாக 900 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்த மெஸ்ஸி

அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கால்பந்து உலகில் பிரபலமானவர்களில் ஒருவராவார். இவர் உலகக் கோப்பை கால்பந்து மற்றும் பிஃபா கால்பந்து போட்டிகளில் தனது நாட்டிற்காகவும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் பார்சிலோனா, பிஎஸ்ஜி, அர்ஜென்டினா அணிக்காக விளையாடிய அவர் தற்போது இன்டர் மயாமி அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாடர்டேல் மைதானத்தில் நடைபெற்ற கான்ககேஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணி, நாஷ்வில் எஸ்சி […]

தங்கம் விலை இன்று சவரனுக்கு மீண்டும் ரூ.400 உயர்வு

மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை, கடந்த 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் (மார்ச் 18) வரை, கடந்த 4 நாட்களில் (ஞாயிறுக்கிழமை விடுமுறை) மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ.3,360 வரை சரிந்தது. இதனிடையே, தங்கம் விலை மார்ச் 19, காலையில் சவரனுக்கு ரூ.2,160, மாலையில் சரவனுக்கு ரூ.3,200 என நேற்று மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ.5,360 வரை குறைந்தது. இதனால், நேற்று மாலையில் தங்கம் விலை சவரன் […]

ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 18ம் தேதி மாலையில் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பிப்.19ம் தேதி முதல் ரமலான் புனித நோன்பை அனுசரித்து வருகின்றனர். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணாமல், நீரருந்தாமல் நோன்பு நோற்று, சிறப்புத் தொழுகை (தராவீஹ்) மற்றும் இஃப்தார் […]

நாளை ரம்ஜான் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 18ம் தேதி மாலையில் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பிப்.19ம் தேதி முதல் ரமலான் புனித நோன்பை அனுசரித்து வருகின்றனர். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணாமல், நீரருந்தாமல் நோன்பு நோற்று, சிறப்புத் தொழுகை (தராவீஹ்) மற்றும் இஃப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக, தவெக மற்றும் ஐயூஎம்எல், மமக, […]

அதிமுக விரும்பும் தொகுதிகளை பாஜக கேட்பதில் தவறில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு, வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி, இங்குள்ள அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் ஆகியவற்றில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியை விட, திமுக தலைமையிலான மத சார்பற்ற ஜனநாயக கூட்டணி ஒருசுற்று முன்னே இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. அதிமுக-பாஜக கூட்டணி இழுபறி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக […]

© NewsTimeTN. All Rights Reserved.