உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ஓம் பிர்லா தகுதி நீக்கம் கோரிய மசோதா மீது மார்ச் 9ல் விவாதம்

மக்களவையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளிடம் பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக கூறி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தன. இதில், 118 எம்பிக்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்காத விவகாரம் பெரும் சர்ச்சையானது. மேலும், எதிர்க்கட்சி பெண் உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து […]

வீட்டில் தங்க அனுமதி – சங்கீதா விஜய் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

தமிழ் திரையுலகின் உச்ச நடிகரும், தவெக தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா கடந்த மாத இறுதியில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் விஜய் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் அரசியல் மற்றும் சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை திருவான்மியூரில் சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் திருமண நிகழ்வுக்கு ஒரே காரில், […]

ஆளுநர், தலைமை நீதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் முதல்வர்

சென்னை உயர் நீதிமன்றத்தின் 55வது தலைமை நீதிபதியாக ம.பி.யைச் சேர்ந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நேற்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ரகுபதி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கடராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து […]

அதிமுக சந்திக்கும் கடைசி தேர்தல் – ஜோதிமணி எம்.பி. விமர்சனம்

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்டதால் திமுகவுடனான கூட்டணி உறுதிசெய்யப்படுமா என்ற இழுபறி நிலை கடைசிவரை நீடித்தது. இதனைத் தூண்டும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசி வந்ததும், ராகுலுக்கு மிகவும் நெருக்கமான தலைவர்களாக பார்க்கப்படும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் மறைமுகமாக தவெகவுடன் தொடர்பில் இருந்ததும் திமுக தலைமையை எரிச்சலடையச் செய்தது. இது தவிர, ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராகுல் சகோதரர் என்ற வார்த்தையை தவிர்த்ததும், அதே பாணியில் […]

உதயசூரியன் சின்னத்தில் மநீம வேட்பாளர்கள் போட்டி?

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட திமுக குழு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், ஐயூஎம்எல், மமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் 12 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியானது. ஆனால் மாநிலங்களவை சீட் வழங்கியுள்ளதாலும், கூட்டணியில் ஏற்கெனவே பல கட்சிகள் இணைந்திருப்பதையும் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளதையும் குறிப்பிட்டு, 2 தொகுதிகள் […]

எல்பிஜி தட்டுப்பாடு – எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா படைகள் இணைந்து நடத்தும் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தடைபட்டுள்ளதால், உலகளவில் எரிபொருள் விநியோகம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனிடையே, இந்தியாவை பொறுத்தவரை 3 […]

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு – இன்று முதல் அமல்

சென்னையில் வீடு மற்றும் வர்த்தக உபயோகத்துக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா படைகள் இணைந்து நடத்தும் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தடைபட்டுள்ளதால், உலகளவில் எரிபொருள் […]

வாக்குக்கு காசு கொடுக்காத கட்சியுடன் மட்டுமே கூட்டணி – சீமான்

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கவிருக்கும் டெக்ஸா திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு வாக்குக்கு பணம் கொடுக்காத அரசியல் பண்பாட்டை ஏற்கும் கட்சிகள் வந்தால் மட்டுமே கூட்டணி பற்றிச் சிந்திக்க முடியும் என தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். மேலும், கரூர் விவகாரத்தில் தவெக […]

© NewsTimeTN. All Rights Reserved.