திருச்சி கிழக்கில் போட்டியா? – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. அதே போல், ஊடகங்களும் திமுகவே வெற்றி பெறும் எனவும் தவெகவுக்கு ஓரளவு வாக்கு சதவீதம் கிடைக்க கூடும் என்றும் கூறி வந்தன. ஆனால், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதி அத்தனை கருத்து கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி, இறுதியில் தவெக 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக தலைமையிலான கூட்டணி 73, அதிமுக கூட்டணி 53 இடங்களில் […]
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை எல்.பி. சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக எல்.பி. சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் நிலத்தடி பணிகள் நடைபெறுவதால், நாளை (27.6.2026) முதல் எல்.பி. சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து எல்.பி.-எம்.ஜி. சாலை சந்திப்பு வரை போக்குவரத்து முழுமையாக மூடப்படுகிறது. திருவான்மியூரில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் எல்.பி.-எம்.ஜி. சாலை சந்திப்பில் இருந்து எம்.ஜி. சாலை, சாஸ்திரி […]
தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதம் – வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் வெயில் சதம் அடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில், நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதே வேளையில், நேற்று 13 இடங்களில் வெயில் சதம் அடித்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். அந்த வகையில், அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக […]
வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 235 ஆக உயர்வு – 11,000 பேரை காணவில்லை

வெனிசுலா நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 11,000 பேரைக் காணவில்லை என அந்நாட்டின் தற்காலிக அதிபர் தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலை, 39 வினாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாக பதிவாகியுள்ளன. அதைத்தொடர்ந்து 30 முறை நில அதிர்வு உணரப்பட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட கடுமையான […]
வாடகைத் தாய் வழக்கு விவகாரத்தில் 4 வாரங்களில் முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

வாடகை தாய் மூலம் பெற்றுக் கொள்ளும் குழந்தைக்கு, பெற்றோர் உரிமை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது 4 வாரங்களுக்குள் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர், தங்களுக்கு வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைக்குப் பெற்றோர் உரிமை கோரி தாக்கல் செய்த மனுவை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி […]
போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் – முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பி விவாதித்து வருகின்றன. ஆனால், போதைப் பொருள் புழக்கம் கடந்த ஆட்சியில் அதிகரித்ததாக முந்தைய அரசு மீது தவெக அரசு பதிலடியாக குற்றம் சாட்டியது. இதனிடையே, தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மாநிலத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை […]
சென்னை ஐஐடியில் தாவர செல் நொதித்தல் உயர் சிறப்பு மையம் அமைப்பு

நாட்டிலேயே முதல்முறையாக சென்னை ஐஐடியில் தாவர செல் நொதித்தல் உயர் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தாவர செல் நொதித்தல் தொழில்நுட்ப மையத்தை ஹெர்பாலைஃப், சென்னை ஐஐடி இணைந்து அமைத்துள்ளன. இதன் மூலம், மூலிகைப் பொருட்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உருவாக்கப்பட உள்ளன. ஹெர்பாலைஃப், ஐஐடி மெட்ராஸ் இணைந்து, இந்தியாவின் முதல் தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பத்திற்கான உயர்சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளன. இதன் மூலம் தாவர அடிப்படையிலான ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை […]
12 மாநகராட்சிகளில் தூய்மை பணியை தனியார் மயமாக்கும் விவகாரம் – எதிர்ப்புக்கு பணிந்து டெண்டர் ரத்து

தமிழகத்தின் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை பொதுமக்கள் – தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ளும் திட்டத்திற்காக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியிருந்த தமிழ்நாடு அரசு, தற்போது அதனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளில் குப்பை சேகரிப்பு, கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பராமரிப்பு பணிகளை மேலும் திறம்பட […]
மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு

சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அறுதி பெரும்பான்மை இல்லாததால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைக்கப்பட்டு, முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். பதவியேற்பின் போது, தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தார். அதன்படி, நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை கடந்த 16ம் தேதி நிதித்துறை […]