உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மலையாள சினிமாவில் யுவன் ஷங்கர் ராஜா அறிமுகம்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா, 1996ம் ஆண்டில், அவரது 16வது வயதில், அரவிந்தன் படம் மூலம் அறிமுகமானார். யுவன் தமிழ்த் திரைப்படம் மற்றும் இசைத் துறையில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியவர். தமிழ்நாட்டில் “ரீ-மிக்ஸ்” கலாசாரத்தை தொடங்கி ஈஅதனை பிரபலபடுத்தியவர். அமீர் இயக்கத்தில் உருவான ராம் படத்தின் இசைக்காக 2006ம் ஆண்டில் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர் யுவன். இவரது இசையில் […]

தமிழகத்தின் 20 எம்.பி. இடங்களை பறிகொடுத்த ஸ்டாலின்? – இபிஎஸ் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் வகையில், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543லிருந்து 850 ஆக அதிகரிக்க செய்யும் மசோதா, தொகுதி மறுவரையறை சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், 2023ம் ஆண்டு சட்டத்தை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 முக்கிய […]

மு.க.ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்த முடியாது: ராகுல் பேச்சு

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. இது தவிர, நடிகர் விஜயின் தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால், தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. […]

ஈரானின் 3 முக்கிய நிபந்தனைகளுடன் ஹோர்முஸ் நீரிணை திறப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த இஸ்ரேல்–லெபனான் 10 நாள் போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை வணிகக் கப்பல்களுக்கு முழுமையாக திறந்துவிட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், 3 முக்கிய நிபந்தனைகள் விதித்துள்ள ஈரான், நிபந்தனை மீறப்பட்டால் நீரிணை மீண்டும் உடனடியாக மூடப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து கடந்த பிப். 28ம் தேதி தாக்குதல் தொடுத்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் […]

பிரேமலதா திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுகவுக்கு உதவி – சுந்தர்.சி பேச்சு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் அதிமுக, திமுக, தவெக, நாதக, சசிகலா – ராமதாஸ் கூட்டணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, […]

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய சிறிது நேரத்தில் மகளிர் இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் வகையில், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543லிருந்து 850 ஆக அதிகரிக்க செய்யும் தொகுதி மறுவரையறை சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தமிழகத்திலும் திமுக சார்பில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், தொகுதி மறுவரையறை மசோதா நகலை தீயிலிட்டு எரித்தும் […]

ஐஎஸ்எல் கால்பந்து – சென்னையின் எப்சி அசத்தல் வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்சி அணி, ஸ்போர்டிங் டெல்லி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, வெற்றி பெற்றது. ஐஎஸ்எல் கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னையின் எப்சி மற்றும் ஸ்போர்டிங் டெல்லி அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்புடனும் வேகமாகவும் விளையாடிய சென்னை அணி வீரர்கள் கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 11வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ஃபரூக் சவுத்ரி அட்டகாசமாக பந்தை […]

தங்கம் விலை மீண்டும் உயர்வு – சவரனுக்கு ரூ.1,200 அதிகரிப்பு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அண்மைக் காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் விலை குறைவதும் மாலையில் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக […]

© NewsTimeTN. All Rights Reserved.