உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி – டைட்டன்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத்தின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன், கேப்டன் கில் களமிறங்கினர். கில் 5 ரன்னிலும், அடுத்த வந்த பல்டர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அடுத்து களமிறங்கிய நிஷாந்த் சிந்து 22 ரன்னில் பெவிலியன் திரும்பியதால் 9.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு […]

விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்தார் முதல்வர் விஜய்

தவெக தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் உள்ளிட்ட வெற்றி பெற்ற தவெக, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர், தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டு நேராக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆரத்தழுவி […]

ஜோதிடருக்கு ஏன் சிறப்புப் பணி அதிகாரி பதவி? விஜய்க்கு காங். எம்.பி கேள்வி

தமிழக முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி வழக்கப்பட்டிருப்பதற்கு தவெக கூட்டணிக்குள்ளேயே எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டுள்ள விஜய்யின், ஆஸ்தான ஜோதிடராக இருக்கும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் சிறப்பு அதிகாரிக்கான பணி […]

திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி தவெக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக திருச்சி துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏ ரவிசங்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகருக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேரவை உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்த வகையில் சட்டப்பேரவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், என்னை 2வது […]

தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த அ.ம.மு.க. எம்எல்ஏ காமராஜ் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட காமராஜ் மட்டுமே வெற்றி பெற்றார். இவர் திமுக அமைச்சரான டி.ஆர்.பி. ராஜாவை தோற்கடித்து, வெற்றி பெற்றிருந்தார். விஜயின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க போதிய இடங்கள் இல்லாமல் திணறிய போது, காமராஜ் ஆதரவு அளித்ததாக கூறப்பட்ட கடிதம் போலியானது எனவும் அப்படியானால் ஒரிஜினல் எங்கே என்றும் அமமுக […]

அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் பதவியேற்பு

அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்.9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎப்), அசாம் கன பரிஷத் ஆகியவை போட்டியிட்டன. காங்கிரஸ், பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அகில் கோகோய் தலைமையிலான ரைஜோர் தளம், திரிணாமுல் காங். கட்சிகள் களமிறங்கின. இதில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவையான நிலையில், பாஜக 82 தொகுதிகளிலும் […]

மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக கடந்த 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுதும் மே 3ம் தேதி நடைபெற்றது. இந்தியாவில் 551 மையங்களிலும், பிற நாடுகளில் 14 மையங்களிலும் நடந்த இந்த தேர்வில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு முறைகேடுகள் […]

விஜய்யின் தவெகவை ஆதரிக்க அதிமுக முடிவு – சி.வி.சண்முகம் பேட்டி

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. அரசியல் களத்தில் புதிதாக களமிறங்கிய கதவெக 108 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த திமுக கூட்டணி 73 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இபிஎஸ் தலைமையில் அதிமுக ஏற்கனவே 10 தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது 11வது தோல்வியை சந்தித்துள்ளது. தேர்தலில் அதிமுக 3வது இடத்தை பிடித்ததால் அக்கட்சியில் உட்கட்சி பூசல் வெளிப்படையாக வெடிக்க தொடங்கியுள்ளது. நேற்று 17வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. […]

© NewsTimeTN. All Rights Reserved.