உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மே.வங்க 2ம் கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குகள் பதிவு

மே.வங்க சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல்கட்டமாக கடந்த 23ம் தேதி 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. மே.வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. 4வது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் […]

தங்கம் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,240 சரிவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அண்மைக் காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஓரிரு நாட்கள் விலை குறைவதும் அதற்கு மறுநாள் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை […]

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி

ஐபிஎல் 19வது தொடரின் 40வது லீக் போட்டி நேற்று சண்டிகர் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ய பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா களமிறங்கி அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். அணியின் ரன்கள் 37 ஆக இருந்தபோது பிரியான்ஷ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கூப்பர் கனோலி அவரது பங்கிற்கு 30 ரன்கள் […]

கே.என். நேரு மீது வழக்கு பதிய உத்தரவிடவில்லை – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, இது தொடர்பாக வழக்கு பதியும்படி, தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக […]

ஏப்.30 தவெக வேட்பாளர்களுடன் தலைவர் விஜய் சந்திப்பு

தமிழ்நாட்டில் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 85.15% வாக்குகள் பதிவாகின. விடுதலைக்கு பின், தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் முதல்முறையாக இந்தத் தேர்தலில் தான் 85.15% வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) பணி மூலம், இறந்தவர்கள், இரட்டை பதிவு, நிரந்தரமாக முகவரி மாறியவர்கள் என சுமார் 74 லட்சம் பேர் வரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். கூடுதல் வாக்குப்பதிவு […]

அண்ணா பல்கலை. கட்டுப்பாட்டு அறையில் ‘ஜனநாயகன்’ படம் பார்த்த தவெக நிர்வாகி கைது

தமிழகத்தில் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் முடிந்த பிறகு, தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு மையங்களில் இருந்து எடுத்து செல்லப்பட்டு ஸ்ட்ராங் ரூமில் சீல் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, […]

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம் – திமுக கடும் கண்டனம்

இந்தியாவில் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுதலைப் பெற்ற பகுதிகளில் புதுச்சேரியும் ஒன்றாகும். அங்கு தற்போதும் கூட பள்ளி, கல்லூரிகளில் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கென தனிப்பாடத்திட்டம் இல்லாத நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழ்நாடு பாடத்திட்டமும், மாகி பகுதியில் கேரளா பாடத்திட்டமும், ஏனாம் பகுதியில் ஆந்திரா பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான், தற்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் சிபிஎஸ்இ நடைமுறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. புதியக் கல்விக் கொள்கையின் […]

ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகளில் 5வது இடத்தில் இந்தியா

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்ஐபிஆர்ஐ) 2026ம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி (2025ம் ஆண்டிற்கான தரவுகள்) ராணுவத்திற்காக அதிகம் நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2025ல் உலகளாவிய ராணுவச் செலவினம் 2,887 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து 11வது ஆண்டாக அதிகரித்துள்ள சாதனை அளவாகும். கடந்த 2024ம் ஆண்டை விட 2025ம் ஆண்டில் ராணுவ செலவினத்துக்கான வளர்ச்சி விகிதம் 2.9% அதிகரித்துள்ளது. உலகளவிலான ராணுவச் செலவில் அமெரிக்கா, […]

ஏப்.30 இந்த 6 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் அடுத்தவாரம் தொடங்கும் நிலையில், நேற்று 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரான்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி சதமடித்துள்ளது. அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நீர்ச்சத்து குறைப்பாட்டை தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் ’வெப்ப தாக்குதல்’ (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு வார்டு அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளது. நேற்று அதிகபட்சமாக, […]

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து முதல் முறையாக களம் கண்டுள்ள நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதற்காக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கடந்த சில நாட்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் […]

© NewsTimeTN. All Rights Reserved.