பெட்ரோல், டீசல் விலை 6வது முறையாக உயர்வு – 12 நாட்களில் ரூ.8 வரை அதிகரிப்பு

நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 6வது முறையாக மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத , மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் முடிந்ததும் வழக்கம் போல் பெட்ரோல், டீசல் விலையை படிப்படியாக உயர்த்தி வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை ஒருநாள் விட்டு மறுநாள் என 6 முறை உயர்த்தப்பட்டுள்ளது. […]
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலக இருப்பதாக சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின்னர், யார் முதல்வர் நாற்காலியில் அமருவது என்பதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பிறகு காங்கிரஸ் தலைவர்கள், மேலிடப் பொறுப்பாளர்களின் முடிவின்படி, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையாவும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் முதல்வராகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 2023 மே மாதம் முதல் சித்தராமையா முதல்வராக இருந்து வரும் சூழலில், கர்நாடக முதல்வர் […]
தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கோரிக்கை

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறை அரசுமுறை பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி சென்றார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தலைமை செயலாளர் சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து முதலமைச்சர் விஜய்க்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த முதலமைச்சர் விஜய், மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார். […]
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, இன்று நீலகிரி, கோவை உட்பட 11 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு தமிழகம், தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு- தென்கிழக்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சிகள் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வேலூர், திருப்பத்தூர், […]
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மீண்டும் முதலிடம் – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள்

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடியை சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார். இதன் போது, தமிழ்நாடு தொடர்பான பல கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் மோடியிடம் வழங்கினார். முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடி சந்திப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பிரதமர் நரேந்திர மோடியை […]
சோனியா, ராகுலை சந்திக்காமல் திரும்பும் விஜய் – காங். அதிர்ச்சி

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் தவெகவினால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூ. கட்சிகள், ஐயூஎம்எல் ஆதரவுடன் தான் தவெக தலைவர் விஜயால் ஆட்சி அமைக்க முடிந்தது. இதையடுத்து, தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி, விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் […]
சென்னை மண்டல கூட்டுறவு நிறுவனங்களில் அமைச்சர் வ. காந்திராஜ் ஆய்வு

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் வ. காந்திராஜ் சென்னை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையால் நடத்தப்படும் பண்ணை பசுமை காய்கறி கடைகள், கூட்டுறவு மருந்தகம், பொது விநியோகத் திட்ட அங்காடிகள் ஆகியவற்றில் பொருட்களின் தரம், விற்பனை, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பூங்கா நகர் மொத்த விற்பனை பண்டக சாலையின் மூலம் கொடுங்கையூரில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமான […]
தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தார். முன்னதாக, அதிமுக இரண்டாக பிரிந்து செயல்பட்ட போது, இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக சில மாதங்கள் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் வெல்லமண்டி நடராஜன் இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். இதையடுத்து, அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சமீபத்திய தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுக மீண்டும் இபிஎஸ், எஸ்பிவி-சிவிஎஸ் தரப்பு என இரண்டு […]
ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 4 முறை 600 ரன்கள் எடுத்து கோலி சாதனை

ஐபிஎல் 19வது தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் குவாலிபயர் 1ல் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஆர்சிபியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 25 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 43 ரன்கள் குவித்து ஆர்சிபி அணிக்கு சிறந்த அடித்தளம் […]
கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 சரிவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை […]