உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

வணிக சிலிண்டர் விலை அதிரடியாக மீண்டும் உயர்வு

வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான எச்பிசிஎல், ஐஓசி, பிபிசிஎல் ஆகியவை பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை பெரும்பாலும் மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. […]

தேச நலன்களுக்கு முன்னுரிமை – கடற்படை புதிய தலைமை தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன்

இந்திய கடற்படையின் தலைமை தளபதியாக இருந்த அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, இவர் மும்பையில் உள்ள மேற்கு கடற்படை கமாண்டின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார். இவருக்கு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஐஎன்எஸ் மைசூர் உள்ளிட்ட முக்கிய போர்க்கப்பல்களுக்குத் தலைமை தாங்கிய அனுபவம் உண்டு. இந்தியக் கடற்படையில் இவர் […]

முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ராஜா சுப்பிரமணி பதவியேற்பு

நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றுக் கொண்டார். முப்படைகளின் தலைமை தளபதியாக கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பணியாற்றி வந்த அனில் சவுகான் நேற்று ஓய்வு பெற்றார். இவரது பதவிக்காலம், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருந்த நிலையில், ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டார். ஜெனரல் அனில் […]

தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.மோகனா உள்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் வி.மோகனா உள்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 5 நீதிபதிகளில், 4 பேர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாவர். உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வரும் வி.மோகனா தமிழ்நாட்டில் உள்ள கோவையைச் சேர்ந்தவர். உச்சநீதிமன்ற வரலாற்றில் வி.மோகனா 12வது பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் வரலாற்றிலேயே வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படும் 2வது பெண்மணி என்ற பெருமையைப் பெறுகிறார். […]

ஐபிஎல் இறுதிப் போட்டி: குஜராத் அணியை வீழ்த்தி ஆர்சிபி மீண்டும் சாம்பியன்

ஐபிஎல் 19வது தொடரின் லீக் போட்டிகள் மார்ச் 28ல் துவங்கி மே 24 வரை நடந்தன. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த ஆர்சிபி, குஜராத், சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. குவாலிஃபயர் 1ல் ஆர்சிபி அணி, குஜராத் அணியை வென்று முதல் அணியாக பைனலுக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணி, சன்ரைசர்ஸ் அணியை வென்றது. குவாலிஃபயர் 2ல் குஜராத் அணி, ராஜஸ்தானை வென்று இறுதிபோட்டிக்கு தகுதி […]

வரவிருக்கும் பட்ஜெட்டில் ரூ.2,500 உரிமைத்தொகை அறிவிப்பு? – அமைச்சர் தகவல்

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சென்னை ஆர்கே நகரில் போட்டியிட்டு வென்ற மரிய வில்சன் தமிழக நிதித்துறை அமைச்சராக உள்ளார். இவர், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு வருகை தந்தார். அங்கு முழங்காலிட்டு பக்தியுடன் பிரார்த்தித்த அவர், பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றியும் வழிபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆண்டுதோறும் வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு வருவது வழக்கமாக இருந்தாலும், இந்தாண்டு மிகவும் சிறப்பானதாக இருப்பதாக தெரிவித்தார். விரைவில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை […]

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக சாவி இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைப்பு

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தமிழக அரசியலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதிமுகவின் இந்த 13 தொடர் தோல்விகளுக்கு இபிஎஸ்ஸே காரணம் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. இபிஎஸ், சிவிஎஸ்-பிஎஸ்வி தரப்பு என கட்சி இரண்டாக பிளவுபட்டு நின்றதால் தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை […]

சென்னையில் ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னையில் ஜூன் 1ம் தேதி முதல் புதிய திருத்தப்பட்ட கால அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் தங்களின் பயணத் திட்டங்களை இதற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரயில்வே துறையில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் ரயில் சேவைகள் மற்றும் பயணிகளின் தேவைகளின் அடிப்படையில் ஜூன் 1ம் தேதி புதிய கால அட்டவணை வெளியிடப்படுவது வழக்கமான ஒன்றாகும். இந்த புதிய திருத்தப்பட்ட கால அட்டவணை முக்கியமாக சென்னை கடற்கரை – […]

காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக டி.கே.சிவக்குமார் இன்று தேர்வு

கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின்னர், யார் முதல்வர் நாற்காலியில் அமருவது என்பதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதன் பிறகு, காங்கிரஸ் தலைவர்கள், மேலிடப் பொறுப்பாளர்களின் முடிவின்படி, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையாவும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் முதல்வராகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 2023 மே மாதம் முதல் சித்தராமையா முதல்வராக இருந்து வரும் சூழலில், கர்நாடக முதல்வர் மாற்றம் தொடர்பான விவாதம் கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. […]

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அஜித் உடன் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக, வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் அவதியுற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டில் அவரது தாயாரின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயாரின் இறப்பு செய்தி அறிந்த அஜித்குமார் துபாயில் […]

© NewsTimeTN. All Rights Reserved.